கணிதப்புதிர்கள்
1. 1, 8, 81, 1024, 78125 ... அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

2. இரண்டு எண்களின் பெருக்குத்தொகை 192. அவற்றின் இரு மடங்குகளின் கூட்டுத்தொகை 400. அந்த எண்கள் எவை?

3. சில மாதங்களுக்கு முன்பு ராமு, சோமு இருவரின் எடைகளும் 9:10 என்ற விகிதத்தில் இருந்தன. தற்போது அவர்களின் எடை விகிதம் 8:9 ஆக இருப்பதுடன் ராமுவின் எடை முன்பைவிட 4 கிலோ அதிகமாகவும், சோமுவின் எடை 5 கிலோ அதிகமாகவும் உள்ளது என்றால் இருவரது தனித்தனி எடைகள் எவ்வளவு?

4. அது ஒரு மூன்று இலக்க எண். அதன் சிற்றிலக்கங்களைக் கூட்டினால் வரும் தொகையும், பெருக்கினால் வரும் தொகையும் சமம். அந்த எண் எது?

5. இந்திராவின் வயதைவிடச் சந்திராவின் வயது 3 குறைவு. ராதாவின் வயது இந்திராவின் வயதை விட 3 அதிகம். மூவரின் வயதையும் கூட்டினால் வரும் தொகை ராதாவின் வயதை விட 25 அதிகம் என்றால் மூவரின் தனித்தனி வயதுகள் என்ன?

அரவிந்த் சுவாமிநாதன்

விடைகள்

© TamilOnline.com