ஆகஸ்ட் 11ம் தேதி டாக்டர் எல்.சுப்ரமணியன் லிங்கன் சென்டரில் உள்ள திறந்தவெளி அரங்கில் சுமார் 2000 ரசிகர்களுக்கு முன்பு, அவருடைய மகனுடன் வயலின் வாசித்தார். இது ஒரு இலவச கச்சேரி.
அன்று எல்.சுப்ரமணியன் அவர்கள் சொந்தமாக இயற்றிய மூன்று பாடல்களை வாசித்தார். ஒவ்வொன்றும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. டாக்டர் எல்.சுப்பிர மணியன் ஓர் உலகப்புகழ் பெற்ற வயலின் மேதை. அவர் கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசை இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர். அவர் கடந்த முப்பது வருடங்களாக 'சேம்பர் வர்க்ஸ்', 'ஆர்க்கஸ்ட்ரா' மேலும் 'சலாம் பாம்பே', 'மிஸிஸிபி மசாலா' போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.
உலகப்புகழ் பெற்ற Herbie Hancock, Jen-Piere Rampal, George Duke, Stephane Grapelli, Yehudi Me Nuhin போன்ற இசைமேதை களுடன் இணைந்து இசை அமைத்து இருக்கிறார். இப்போது லட்சுமிநாராயணா Global Musical Festiveal இயக்குநராக இருக்கிறார். இவ்விழா எல்லாவிதமான இசைகளையும் ஒருமைப் படுத்த ஒரு மகத்தான முயற்சியாகும். பதினைந்து வயதான அவர் மகன் அம்பி சுப்பிரமணியம் உலகம் முழுவதும் சுற்றி வயலினிலும், பியோனாவிலும் மிக பிரமாத மாக வாசிக்கிறார். வெகுவிரைவில் அடுத்த சந்ததியின் இந்திய கிளாசிகல் வயலின் மேதையாக வருவதில் சந்தேகமே இல்லை.
அன்றைய நிகழ்ச்சியில் 2000 ரசிகர்களில் 70 சதவீதத்தினர் மேற்கத்திய நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர் அன்று வாசித்த பாட்டுக் கள் மிக எளிதாகவும், மனதில் பதியும் படியாகவும் இருந்தன. அவர்கள் இருவரும் சேர்ந்து வழங்கிய இசையை ரசிகர்கள் மெய்மறந்து கேட்டார்கள். இனிமையாகவும் மனதை உற்சாகப்படுத்துவதாகவும் இருந்தன.
16.3 ஏக்கர் பரப்பளவு உள்ள Lincoln Center complex, உலகத்திலேயே மிகப் பெரிய அரங்கம். இங்கு அங்கேயே தங்கி படிக்கும் கலை நிலையங்கள் 12 உள்ளன. இந்த 12 நிலையங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தன. இதனைப் பற்றிய விவரங்களை அறிய lincolncenter.org |