தேவையான பொருட்கள்: முட்டைக்கோஸ் - 200 கிராம் கடலைப்பருப்பு - 1/4 கிண்ணம் உளுத்தம்பருப்பு - 1/4 கிண்ணம் துவரம்பருப்பு - 1/4 கிண்ணம் பச்சை மிளகாய் - 5 பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிக்க
செய்முறை: மூன்று பருப்புகளையும் ஒன்றாக அரைமணி நேரம் ஊற வைக்கவும். பச்சை மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். முட்டைக்கோஸைப் பொடியாக நறுக்கி அரைத்த கலவையுடன் சேர்க்கவும். இந்த மாவை வடையாகத் தட்டி எண்ணெயில் மிதமான சூட்டில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். மொறு மொறுவென்று தின்னச் சுவையாக இருக்கும்.
ராதா மோகன், டெக்ஸாஸ் |