‘தமிழ் தியாகய்யர்' என்று கொண்டாடப்படுவர் ப்ரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் அவர்கள் பெயரால் நடத்தப்படும் இரண்டாவது இசை விழா 2009 மே 9-10 தேதிகளில் சான்ஸ்பிராஸிஸ்கோ விரிகுடாப் பகுதியின் சன்னிவேல் ‘சனாதன தர்ம கேந்த்ரா' வளாகத்தில் நடைபெற்றது. இதையொட்டி நடந்த போட்டிகளில் 150க்கும் மேலானவர்கள் கலந்து கொண்டனர். சிவன் அவர்களின் பரவலாக அறியப்படாத இசை உருப்படிகளை வெகு அழகாகக் பாடினர். வாய்ப்பாட்டு, வீணை, வயலின் மற்றும் நடனம் என எல்லாப் பிரிவுகளிலும் பல்வேறு கிருதிகள் எடுத்தாளப்பட்டன.
சிவன் அவர்களின் ஆராதனை மே 10 அன்று நடைபெற்றது. 200க்கும் அதிகமானவர்கள் நிகழ்ச்சிகளில் பங்க்கேற்றனர். இளையோர் மட்டுமல்ல; ஹரி தேவநாத், ஸ்ரீகாந்த் சாரி (வீணை), துர்கா லக்ஷ்மி போன்ற பல கலைஞர்களும் ஆராதனையில் பங்கு பெற்றனர்.
விரிகுடாப் பகுதியின் இசை, மற்றும் நடன ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி கௌரவித்தார் பாபநாசம் அசோக் ரமணி. விழா மேடையில் விஷால் ரமணி (நடனம்), ஹேமா ஸிஸ்டா, கீதா பென்னட், ஆஷா ரமேஷ், ஜெயஸ்ரீ தாசரதி, அனு சுரேஷ், ஜெயந்தி உமேஷ், சகுந்தலா, பூர்ணிமா கிருஷ்ணமூர்த்தி, கலா ஐயர், புவனா வெங்கடேஷ், ஸ்வாதி ரவி (நடனம்), சங்கீதா சுவாமிநாதன், அனுராதா ஸ்ரீதர் (வயலின்), நாகராஜ் மாண்ட்யா, ரவீந்த்ர பாரதி, ஸ்ரீகாந்த் சாரி, அசோக் சுப்ரமண்யம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
பாபநாசம் சிவன் அவர்கள் இசையுலகிற்கு விட்டுச் சென்றிருக்கும் இசைச் செல்வத்தை நினைவு கூர்வதற்கும், உலகெங்கும் பரப்புவதற்கும், அவருடைய பேரனும், இசைக்கலைஞருமான அசோக் ரமணியும், அவருடைய தாயார் டாக்டர் ருக்மணி ரமணியும் செய்து வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. |