ஜூன் 6, 2009 அன்று சிகாகோவின் குக் கவுன்டி டீர் குரோவ் காவல் வனத்துக்கு அமெரிக்கத் தமிழ் பள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட சிறார்களும், பெற்றோரும் சுற்றுலாவாகச் சென்றனர். மழை நாளாக இருந்தும் திறந்த வெளியில் அனைவருக்கும் பங்கு கொள்ளும் ஆர்வம் மேலோங்கி நிற்பதைக் காண முடிந்தது. இதில் கைப்பந்து, சாக்கர் மற்றும் பல சுவையான விளையாட்டுகள் இடம்பெற்றன. மதிய உணவுக்குப் பின் தமிழில் 'மறைந்துள்ள செய்தி என்ன' என்ற சொல் விளையாட்டில் எல்லா வயதினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நேபர்வில்லைச் சேர்ந்த ப்ரியாவின் நேர்த்தியான பழ அலங்காரம் காண்போர் கண்ணைக் கவர்ந்தது என்றால் மிகையாகாது.
மீனா சுபி, சிகாகோ |