கிரிக்கெட் பக்திப் பாடல்கள்
‘கிரிக்கெட் ஒரு விளையாட்டல்ல, மதம்' என்று ஒருவர் T20 மைதானத்தில் அட்டை ஏந்திப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்படிப்பட்டவர்களுள் கே.ஆர். ராமகிருஷ்ணனும் ஒருவர். சபரி இன் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் தலைமைச் சட்ட அதிகாரியாக இருக்கும் இவர், ஏற்கனவே கிரிக்கெட் விநாயகர் கோவில் கட்டிப் பிரபலமானவர். போதாததற்கு ‘கிரிக்கெட் கணேஷ் டெம்பிள்' என்ற பெயரில் கிரிக்கெட் பக்திப் பாடல் குறுந்தகட்டைக் கொண்டு வந்திருக்கிறார். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிரிக்கெட் பற்றிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தானே இசை அமைத்து, பாடி உருவாக்கியிருக்கும் இந்தக் குறுந்தகட்டில், கிரிக்கெட் கொள்கைகள், ஆட்ட நுணுக்கங்களை விவரித்திருக்கிறார் இவர். வித்தியாசமான முயற்சி.

அரவிந்த்

© TamilOnline.com