அமார்த்யா சென்னுக்கு டாக்டர் பட்டம்
அமார்த்யா சென் நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார நிபுணர். 1998ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. அதன் பின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கட்டுபாட்டில் வரும் டிரினிட்டி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார் சென். தற்போது ஹார்வார்டில் பேராசிரியராகப் பணிபுரியும் அவருக்கு, கெளரவ டாக்டர் பட்டம் வழங்க கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் 800வது ஆண்டுவிழா விரைவில் நடக்க இருக்கிறது. அதற்கான விழாவின் போது இளவரசர் பிலிப், கேம்பிரிட்ஜ் செனட் அவையில் இந்த பட்டத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், அவரது மனைவி மெலின்டா கேட்ஸ், ஈரான் இளவரசர் கரிம் அல் ஹுசைனி ஆகா கான் உள்ளிட்ட 9 பேருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட இருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com