‘சிவகிரி'யில் சிவகிரி
இல்யூஷன் இஞ்சினியரிங் பட நிறுவனத்தின் சார்பாகத் திருமதி மாயா பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் புதிய படம் ‘சிவகிரி'. இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்கநராக இருந்த சிவாஜி இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக நடிப்பவர் பெயரும் சிவகிரிதான். நாட்டுக்குள் ஊடுருவியிருக்கும் தீவிரவாதிகளை அழிப்பதற்காகக் களமிறங்கும் ஒரு அதிரடி போலீஸ் அதிகாரியின் கதை சிவகிரி என்கிறார் சிவாஜி. மலையாளத் திரையுலகில் மம்முட்டி-மோகன்லாலுடன் கதாநாயகியாக நடித்துவரும் ருக்ஷனா மற்றும் மலேசியாவின் முன்னணி நடிகை சாந்தினி ஆகியோர் கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் தமிழ்கத்தைச் சேர்ந்த புதுமுகம் ஒருவரும் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இசை: அராபின் யூசுப். பாடல்கள்: அழகிரி பாண்டியன்.

அரவிந்த்

© TamilOnline.com