விக்னேஷ் நடிக்கும் ‘ஈசா'
பாலுமகேந்திரா உட்படப் பல பிரபல இயக்குநர்களின் படத்தில் நடித்தவர் விக்னேஷ். ‘ராமன் அப்துல்லா', ‘சூரி' போன்ற படங்களில் வித்தியாசமான நடிப்பைக் காட்டியவர். தற்போது அவர் ‘ஈசா' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜே.கே.கிரியேஷன்ஸ் சார்பில் ஜெய்கிருஷ்ணன் தயாரிக்கும் இப்படத்தை பாலகணேசா இயக்குகிறார். தூத்துக்குடியின் உப்பளத்தைப் பின்னணியாகக் கொண்ட இக் கதையில், சுடலீசன் எனும் வித்தியாசமான பாத்திரமேற்று நடித்திருக்கிறார் விக்னேஷ். ஹரண் எனும் புதுமுகம் இசையமைக்கிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தின் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டதுடன், பாடல்கள் நன்றாக வந்திருப்பதாகவும் வாழ்த்திப் பேசினார். இந்தப் படத்தின் கதையும் நன்றாக இருக்கிறது. படமாக்கப்பட்ட விதமும் திருப்தியாக இருக்கிறது என்று கூறும் விக்னேஷ், இப்படம் வெளியானால் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும் என்கிறார் உற்சாகத்துடன். கதாநாயகியாக லக்ஷனா நடித்திருக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com