ராஜமார்த்தாண்டன்
தமிழில் முக்கியமான இலக்கியத் திறனாய்வாளர்களுள் ஒருவரும், கவிஞருமான ராஜமார்த்தாண்டன் (61) சாலை விபத்தில் காலமானார். நாகர்கோவிலில் உள்ள பொற்றையடி கிராமத்தில் பிறந்த ராஜமார்த்தாண்டன் முதுகலை தமிழ் இலக்கியம் படித்தார். புதுக்கவிதை பற்றிய முனைவர் ஆய்வில் ஈடுபட்டார். பின்னர் தமிழின் மிக முக்கியமான படைப்புகளைத் தாங்கி வந்த கொல்லிப்பாவை காலாண்டிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். தினமணி நாளிதழில் உதவி ஆசிரியராகவும் சிறிது காலம் பணியாற்றினார்.

'புதுமைப்பித்தனும் கயிற்றரவும்', 'அப்படியே நிற்கட்டும் அந்த மரம்', 'என் கவிதை', 'ராஜமார்த்தாண்டன் கவிதைகள்', 'கொங்குதேர் வாழ்க்கை', 'புதுக்கவிதை வரலாறு' போன்ற அவரது நூல்கள் முக்கியமானவை. சிவாஜி, கண்ணதாசன், புதுமைப்பித்தன் ஆகியோரிடம் மிகுந்த அபிமானம் கொண்டிருந்த ராஜமார்த்தாண்டன், பிரமிள், சுந்தர ராமசாமி போன்ற அக்கால மூத்த படைப்பாளிகளிடமும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். காலச்சுவடு மாத இதழில் பணியாற்றி வந்தார். அன்னாருக்குத் தென்றலின் அஞ்சலிகள்.



© TamilOnline.com