தென்றலில் வரும் குறுக்கெழுத்துப் புதிர் குறித்து வரும் பல மின்னஞ்சல்கள் மிகவும் ஊக்கமளிக்கின்றன. இதை ஆக்குபவனுக்கு இதெல்லாம் உற்சாகம் தருகிறவை. ஆனால் கடந்த எட்டு வருடங்களில் ஆரம்ப காலங்களில் இப்படி மின்னஞ்சல் எழுத யாருமில்லாதபோதும் இந்தப் புதிரைத் தொடர்ந்து வெளியிடவேண்டுமென்று உறுதியாக இருந்த தென்றல் பதிப்பாசிரியருக்கு நன்றி சொல்கிறேன். இப்போது மேலும் பலர் புதிர்களைச் செய்து இணையத்தில் வெளியிட ஆரம்பித்திருப்பதால் இந்த வியாதி நன்றாகப் பரவிட வாய்ப்பிருக்கிறது. வளரட்டும்.
குறுக்காக
1. ஒரு பூவாசம் பங்கிட்டுக் கொள்ளலாம் (5)
4. இடுப்பு மாவு செய் (2)
6. பல உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு இடையின்றி மழுங்கும் மயங்கும் (4)
7. நடமாட்டமற்ற முதலாளி பாதியாய்க் குலைந்து தழைத்தோங்கும் மரத்தை அணைத்தார் (4)
9. பஞ்சமில்லாமல் ராக தாளமா? உருட்டிவிடு (5)
12. அசோகவனத்தில் ஆறுதல் தந்த பின்னல் முன்னே முறுக்கு (4)
14. இத்தகைய கொம்பன் ஏரோட்டவும் வண்டியிழுக்கவும் ஒத்துழைப்பதில்லை (4)
17. விளிம்புகள் கொண்டு பாத்திரத்தை வழி (2)
18. ஆசைப்பட்ட பிறவி இடையின்றி சுழியின்றி உயரும் சுழலும் (5)
நெடுக்காக
1. சனி முதல் எதிர் வரும் வியாழன் இலை காய்ந்தது (3)
2. மிகவும் தந்தையென்று போற்றப்படும் கடவுள் (5)
3. த(த்)தை தென்னைமரத்தில் இல்லை (2)
4. பூஜைக்குப் பூவும் சாவுக்கு விதையும் தரும் (3)
5. நடுவில் ஓட்டையான மேளமிலார் வேறுவிதமாய்ப் பிறரை வேலை வாங்குவார் (4)
7. தலைமை ஆசிரியை பத்மா சுரத்தையிழந்துவிட சாந்தியடையும்படி பிரார்த்திக்கப்படுவது (3)
8. ஒரு மணிக்குப் பின் பறவைகளுக்கு உணவு இலச்சினை (4)
10. நூல் நிலையத்திலிருக்க வேண்டிய சாதனம்? (3)
11. திருமணம் செய்துகொண்ட பிறகும் இறுதியாக வருகையை அறிவிக்கக் கூறப்படுவது (5)
13. சிறிய தெருவை வெளியூரிலிருந்து வந்து வியாபாரம் செய்யுமிடம் எனலாம் (3)
15. அடங்க எதிர்த்து வந்து இலையணிதல் இல்லை இல்லை (3)
16. வெந்து போகும்படி அணை? (2)
நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. 15க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.
vanchinathan@gmail.com
ஜூன் 2009 விடைகள்:
குறுக்காக: 5. பாய் 6. யாழ்ப்பாணம் 7. கலிங்கா 8. தொகுதி 9. தகுமா 11. சுவடு 13. தாசரதி 16. ஊர்க்குருவி 17. சகி
நெடுக்காக: 1. நெய்வேலி 2. கையாலாகாத 3. சிப்பி 4. இணங்கு 10. மாதாகோவில் 12. வளர்க 14. ரஞ்சனி 15. மகுடி
ஜூன் 2009 புதிர் மன்னர்/அரசி
ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ஃப்ரீமாண்ட், கலி.
வி. சந்திரசேகரன், சன்னிவேல், கலி.
லக்ஷ்மி ஷங்கர், நார்கிராஸ், ஜார்ஜியா
ஆ.வே. லக்ஷ்மிநாராயணன், சான் டியாகோ, கலி.
ஸ்ரீனிவாசராமானுஜம், இல்லினாய்
ரங்கராஜன் யமுனாச்சாரி, அட்லாண்டா, ஜார்ஜியா
சுரேஷ், ஷார்ஜா
ஹரிஹரன் சங்கரன், மும்பை
ஆர். நாராயணன், ஃபால்சம், கலி.
எஸ்.பி. சுரேஷ், மயிலை
வி.என். கிருஷ்ணன், சான்டாகிளாரா, கலி.
குமார் ராமசுப்ரமணியன், நியூ ஜெர்ஸி
வி.ஆர். பாலகிருஷ்ணன், ஜவஹர்நகர், சென்னை
நாகராஜன் அப்பிச்சிகவுண்டர், நியூயார்க்
அமிர்தா பார்த்தசாரதி, அரும்பாக்கம், சென்னை
ராஜேஷ் கார்கா, நியூ ஜெர்ஸி
குன்னத்தூர் சந்தானம், சென்னை
ஜயஷங்கர் ராமநாதன், ஃப்ரீமாண்ட், கலி.
சிங்கநல்லூர் கணேசன், கலி.
ஆனந்த் கல்யாணராமன், சான் ஹோசே, கலி.