சீரக ரசம் தேவையான பொருட்கள் புளி - எலுமிச்சை அளவு மிளகாய் வற்றல் - 2 தக்காளி - 2 ரசப்பொடி - 2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப சீரகம் - 1 தேக்கரண்டி கடுகு - சிறிதளவு பெருங்காயம் - சிறிதளவு நெய் - சிறிதளவு (தாளிக்க) கறிவேப்பிலை - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை நறுக்கிய தக்காளி, புளித் தண்ணீர், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். ஊற வைத்த துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், சீரகம், கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து அரைத்த கலவையைக் கொதிக்கும் ரசத்தில் சேர்த்துக் கலக்கவும். பொங்கி நுரைத்து வரும் சமயம் இறக்கித் தாளிக்கவும். சூடான ரசம் தயார்.
- லதா சந்திரமௌலி, காலேஜ்வில், பென்சில்வேனியா |