ஸ்ரீலங்காவின் அகதி முகாமில் உள்ள தமிழருக்கு உதவக் கலைநிகழ்ச்சி
ஸ்ரீலங்காவில் போர் நடந்து ஓய்ந்த இடங்களில் தற்போது சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உணவின்றி, நீரின்றி, மாற்று உடையின்றி, குளிக்க வசதியின்றி கஷ்டப்படுகிறார்கள். சுகாதாரம் இன்மையால் நோய்வாய்ப் படுகின்றார்கள். தோல் நோய், குஷ்டம், அம்மை, போன்ற நோய்கள் அகதி முகாம்களில் காணப்படுகின்றன. கைக்குழந்தைகள் பசியாறப் பாலின்றி அழுதவண்ணம் உள்ளனர். ஆடுமாடுகளை போல் முட்கம்பி வேலிக்குள் மக்கள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். மழைக்காலம் தொடங்கினால் அவதி இன்னும் அதிகமாகும்.

அவர்களுக்கு மிக அத்தியாவசியமான பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவி செய்யும் நோக்கோடு Reach Out-Now (USA), Inc என்கிற லாபநோக்கற்ற பொது அமைப்பு ஒன்று கலிபோர்னியாவின் விரிகுடாப் பகுதியில் துவங்கப்பட்டுள்ளது. ஜூலை 26, 2009, ஞாயிறுக்கிழமை அன்று பிளெசன்டன் ஆமடார் அரங்கத்தில் மாலை 4:30 மணிக்கு கலைநிகழ்ச்சி ஒன்றை இவ்வமைப்பு நிதி திரட்டுமுகமாக ஏற்பாடு செய்துள்ளது. இதில் தமிழ் மட்டுமன்றி பிறமொழி நடனம் மற்றும் ஆடையலங்கார நிகழ்ச்சிகள் நடைபெறும். நுழைவுக் கட்டணம்

பள்ளிச் சிறாருக்கு - $10
பிறருக்கு - $20

கலை நிகழ்ச்சிகள் பற்றி அறியவும், தொண்டு செய்ய, நன்கொடை தர விரும்புவர்களும் பார்க்க வேண்டிய இணையதளம்: www.ReachOut-NowUsa.org
தொலைபேசி - தக்ஷிணி - (925) 931-9966

நன்கொடைக்கு வரிவிலக்கு உண்டு.

இந்தப் புனிதமான சேவைக்கு உங்கள் ஆதரவு தாருங்கள்.

© TamilOnline.com