மே 20, 2009 அன்று மிச்சிகன் தமிழ்ச் சங்கம் அன்று ப்ளூம்ஃபீல்ட் ஹில்ஸ் பொது நூலகத்தில் பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாச்சல அடிகளார் அவர்களைச் சிறப்பு விருந்தினராகக் கொண்ட ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. செயற்குழு துணைத் தலைவி திருமதி கல்பனா ஹரிஹரனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ் இலக்கியத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்ற அடிகளார், 'வழி காட்டும் வள்ளுவம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். எவ்வாறு ஒன்றே முக்கால் அடிக்குள் அவ்வளவு கருத்துகளைத் திருவள்ளுவரால் கூற முடிந்தது என்று விளக்கியதோடு, தற்போதைய micro, macro தத்துவங்களுக்கும் தமிழ்க் கடவுள் முருகன் கை வேலுக்கும் உள்ள ஒற்றுமையைக் கூறியது சிறப்பாக இருந்தது. பின்னர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்ததுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
ராதா அக்கூர், மிச்சிகன் |