கீர்த்தனை பாடியே கின்னஸ்
1937ம் ஆண்டு போலந்து நாட்டில் ஒரே இடத்தில் 60 ஆயிரம் பேர் கூடி அந்நாட்டு தேசிய கீதத்தைப் பாடி உலக சாதனை படைத்தனர். இது முறியடிக்கப்படாத சாதனையாக இருந்தது. இந்நிலையில் ஆந்திராவின் ஹைதராபாத் நகரில் 150,000 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடி ஸ்ரீ அன்னமாச்சாரியாவின் கீர்த்தனைகளைப் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். “கூடியிருந்தோர் உணர்ச்சிப் பெருக்குடனும், பக்தியுடனும் பாடியது மெய்சிலிர்க்க வைத்தது” என்றார் கின்னஸ் பார்வையாளர். கின்னஸ் அமைப்பின் நடுவர் ரேமண்ட் மார்ஷல் இந்தச் சாதனைக்கான விருதுச் சான்றிதழை ஆந்திர நிதியமைச்சர் ரோசய்யாவிடம் வழங்கினார். திருமலை-திருப்பதி தேவஸ்தானமும், ஆந்திர கலாசாரத்துறையும் இணைந்து ‘லட்சகலா சங்கீர்த்தனர்ச்சனா' என்ற இந்த மாபெரும் இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. வியக்கத்தக்க சாதனைதான்!

அரவிந்த்

© TamilOnline.com