‘ஓடிப்போலாமா?' கேட்பவர்கள் பரிமள்-சந்தியா
ஸ்ரீவாரு பிலிம்ஸ் சார்பில் வி. பரணி பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் படம் 'ஓடிப் போலாமா'. இதில் நடிகை சங்கீதாவின் சகோதரர் பரிமள் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடி 'காதல்' சந்தியா. கோட்டா சீனிவாசராவ், மகாதேவன், சுமன் ஷெட்டி, தம்பிராமையா ஆகியோருடன் ‘அசத்தப்போவது யாரு' புகழ் மகேஸ்வரி முக்கியப் பாத்திரம் ஏற்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கண்மணி. இவர் ஏற்கனவே ‘ஆஹா எத்தனை ஆழகு', தெலுங்கில் ‘நாவுபிரி', 'சின்னோடு', 'கால் சென்டர்' ஆகிய படங்களை இயக்கியவர். பாடல்: நா.முத்துகுமார், சினேகன், தபூசங்கர்; படத்தொகுப்பு: சுரேஷ் அர்ஸ்; இசை: டி. இமான். “பெற்றோர்களின் சந்தோஷத்துக்காகப் பிள்ளைகள் ஓடிப்போகிறார்கள். அப்படி ஓடிப்போன பிள்ளைகள் இருவர் சந்திக்கும்போது ஏற்படுகிற விறுவிறுப்பான சம்பவங்கள்தான் ஓடிப்போலாமா” என்கிறார் கண்மணி.

அரவிந்த்

© TamilOnline.com