'குதிரை' ரமணா
விஜய் நடித்த ‘திருமலை', ‘ஆதி' மற்றும் தனுஷ் நடித்த ‘சுள்ளான்' ஆகிய படங்களை இயக்கியவர் ரமணா. அவர் தற்போது கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘குதிரை'. ரமணாவின் உதவியாளரான ரா. ராஜசேகர் இப்படத்தை இயக்குகிறார். பிரகாஷ் ராஜ், வினீத், இளவரசு, லலிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பெயருக்கேற்றவாறு இது மிக வித்தியாசமான படமாக இருக்கும் என்கிறார் ரமணா.

அரவிந்த்

© TamilOnline.com