ஆர்யா நடிக்கும் ‘சிக்கு புக்கு'
‘நான் கடவுள்' படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் வந்து பயமுறுத்திய ஆர்யா, தற்போது வெளியாகியுள்ள 'சர்வம்' படத்தில் காதல் நாயகனாக நடித்திருக்கிறார். அடுத்து ஆர்யா நடிக்க இருக்கும் புதிய படம் ‘சிக்கு புக்கு'. இப்படத்தை மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் மணிகண்டன் இயக்குகிறார். கதாநாயகிகளாக ஸ்ரேயா, பிருத்திகா ராவ். ஆர்.பி. குருதேவ் ஒளிப்பதிவு, ஹரிஹரன்-லெஸ்லி இசை. இளமை ததும்பும், காதல் + ஆக்‌ஷன் படம் இது என்கிறார் மணிகண்டன்.

அரவிந்த்

© TamilOnline.com