சமையல் தந்திரங்கள்!
* இரண்டு மேசைக்கரண்டி வெந்தயம் எடுத்து வெறும் வாணலியில் சிவக்க வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். கடைசியாகச் சாம்பாரில் இந்த வெந்தயப்பொடியை அரை டீஸ்பூன் சேர்த்து கொதி வந்ததும் இறக்கினால் சாம்பார் வாசனை கலக்கும்.
* கேரட் அல்வா செய்து இறக்கும் முன்பு ஒரு தேக்கரண்டி கசகசாவைப் பொன்னிறமாக வறுத்துக் கலக்கவும். மாறுபட்ட சுவையுடன் மிகவும் ருசியாக இருக்கும்.
* அரை கிண்ணம் ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி அதை அடை மாவில் கலந்து வார்த்தால் அடை மொறுமொறுப்பாக, சுவையாக இருக்கும்.
* பீன்ஸ் வாங்கியவுடன் காம்பு ஆய்ந்து, வேண்டிய அளவில் நறுக்கி, காற்றுப் புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி ஃப்ரீஸரில் வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை நாள் ஆனாலும் கெடாமல் இருக்கும்.

ஜயலக்ஷ்மி கணேசன்,
ட்ராய், மிச்சிகன்

© TamilOnline.com