தேவையான பொருட்கள்: பயத்தம்பருப்பு - 1 கிண்ணம் மாங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 மிளகாய் வற்றல் - 1 கடுகு - 1 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு பட்டாணி (வேகவைத்தது) - 1/2 கிண்ணம் கொத்துக்கடலை (வேக வைத்தது) - 1/2 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப கறிவேப்பிலை - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு எண்ணெய் - தாளிக்க
செய்முறை பயத்தம் பருப்பை அதிகம் குழையாமல் வேகவிடவும். அதை வடியவிட்டு, மாங்காய், தேங்காய் துருவல்கள் சேர்த்து கடுகு, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய், பெருங்காயம் தாளித்து உப்புப் போடவும். பட்டாணி, கொத்துக்கடலையைச் சேர்க்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலை கலந்து சாப்பிட ருசியாக இருக்கும்.
தங்கம் ராமசாமி |