வாழைத்தண்டு கோசுமல்லி
தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு (நாரில்லாமல் நறுக்கி மோரில் போட்டது) - 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
பயத்தம் பருப்பு (ஊற வைத்தது) - 1/4 கிண்ணம்
பட்டாணி - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
மிளகாய் வற்றல் - 1
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு

செய்முறை
வாழைத்தண்டைப் பிழிந்து எடுத்து, பயத்தம் பருப்பு, பட்டாணி, தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்துக் கலக்கவும். பின் கடுகு, பெருங்காயம், மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். எலுமிச்சைச் சாறு கலந்து கறிவேப்பிலை, கொத்துமல்லி நறுக்கிப் போட்டுப் பரிமாறவும். இது வயிற்றுப் புண், சர்க்கரை வியாதி, சிறுநீரகக் கல் ஆகியன உள்ளவருக்கு மிகவும் நல்லது.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com