TAGDVயின் சித்திரைத் திருவிழா
டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் (TAGDV) தமிழ்ப் புத்தாண்டுத் திருவிழா ஏப்ரல் 18 அன்று லேன்ஸ்டேலில் உள்ள பென்பூருக் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. குழந்தைகள் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. சிறுவர், சிறுமிகளின் பாடல்கள், நடனங்கள் மக்களை மகிழ்வித்தன.

பி.என்.சி. வங்கியினர் குழந்தைகளுக்காக ‘சுற்றுப்புறம் காப்போம்' என்ற தலைப்பிலான போட்டிக்கான பரிசுகளை வழங்கினர். அஸ்வினி, விக்னேஷ், சாயி, வருண், எல். ஷாலினி ஆகியோர் பி.என்.சி பேங்கின் பிரதிநிதியான ஜேனட் அவர்களிடம் பரிசு பெற்றனர். ஜேனட், பி.என்.சி வங்கியின் செயல்பாடுகள் பற்றிப் பேசியதுடன் அவர்கள், மறுசுழற்சிக்குக் (ரீ-சைக்ளிங்) கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கினார்.

மற்றும் பெரியவர்களுக்காக நடந்த 'காய்கறி பழ அலங்காரப் போட்டி'யின் முடிவுகளை பொருளாளர் லதா அறிவித்தார். முதல் பரிசினை அரி-மகேந்திரன் பெற்றார். அவர் தர்பூசணியில் செய்திருந்த மயிலை அனைவரும் ரசித்தனர். சதாசிவம், விஜி, பிருந்தா, தாரிணி ஆகியோரும் பரிசுகளை வென்றனர். சதாசிவம், மினி மிருகக்காட்சிச் சாலையைக் காய்கறிகளில் செய்திருந்தது சிறப்பு. TAGDV கமிட்டி, வரும் தீபாவளியின் போதும் இப்போட்டிகளைத் தொடர்ந்து நடத்த உள்ளது.

விருந்திற்குப் பின்னர் 'டெனன்ட் கமேண்ட்மெண்ட்ஸ்' என்ற நகைச்சுவை நாடகத்தை நியூஜெர்ஸியின் ஸ்டேஜ் ஆஃப் ஃப்ரெண்ட்ஸ் நாடகக் குழுவினர் வழங்கினர்.

லதா சந்திரமௌலி

© TamilOnline.com