ரஷ் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத் திருவிழா
2009 மே 15 முதல் 17 வரை மேற்கு நியூயார்க் மாநிலத்தில் இருக்கும் ரஷ் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயத்தின் வருடாந்திரத் திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் போது யாகங்கள், சங்காபிஷேகங்கள், விஷேட பூஜைகள் ஆகியன நடைபெறும்.

15ம் தேதி அன்று விநாயகர் பூஜை நடைபெறும். அன்று ஸ்ரீ விஜய்கோபால் அவர்களின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீணா கணேசன் வயலினும், செல்வி சிந்துஜா மிருதங்கமும் வாசிக்கின்றனர்.

16ம் தேதியன்று காலை சண்டி ஹோமம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அம்பாளுக்கு அன்னப் பாவாடை அலங்காரமும் அர்ச்சனைகளும் செய்யப்படும். மதியம் அன்னதானம் நடைபெறும். தொடர்ந்து அமெரிக்காவின் புகழ் பெற்ற ஸ்ரீமதி அனிதா கிருஷ்ணா தனது பாடல்களால் தேவியை மகிழ்விப்பார். இவர்களுடன் நியூ ஜெர்ஸியைச் சேர்ந்த இளம் கலைஞர்களான சித்தார்த் வயலினும், அபரஜித் மிருதங்கமும், ஸூபாங் கடமும் வாசிப்பர். தொடர்ந்து அன்னையின் ஸ்ரீசக்ர ரத பவனி நடைபெறும்.

17ம் தேதி அன்று தத்தாத்ரேயர் உற்சவம் நடைபெற உள்ளது. அன்று ஆயிரத்தெட்டு வலம்புரி சங்காபிஷேகமும், அன்னதானமும் நடைபெறும். தொடர்ந்து சங்கீத மஹா மேதை தி.கே. கோவிந்த ராவ் இசை மழை பொழிவார். எண்பது வயதைக் கடந்த இவருடன் பிட்ஸ்பர்க் விக்ரம் சுந்தர ராமனும், ராம் நாராயணும் இணைந்து பாடுகின்றனர். பக்கவாத்தியமாக கோர்நிங் ஸஷிதர் வயலினும், ரோஹான் கிருஷ்ணமூர்த்தி மிருதங்கமும் வாசிக்க உள்ளனர்.

மேலதிக விவரங்களுக்கு: www.srividya.org

2010 ஜூலை மாதம் நடைபெற உள்ள அதிருத்ர மகாயக்ஞம் பற்றி அறிந்து கொள்ள: www.atirudram.com

சுகிர் பொன்னுச்சாமி

© TamilOnline.com