மும்பையைச் சேர்ந்த விக்ரம் சுந்தரம் ஒரு சிறந்த சமையற்கலை நிபுணர். லண்டனில் பதினான்கு ஆண்டுகள் ஓட்டல் நடத்திப் புகழ்பெற்றவர். பிரிட்டனின் சிறந்த பத்து சமையற் கலைஞர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2005ம் ஆண்டில் அமெரிக்கா சென்ற இவர் அங்குள்ள ஹோட்டல்களில் பணியாற்றினார். தற்போது வாஷிங்டனில் உள்ள ரசிகா ஹோட்டலில் தலைமை சமையற்கலை நிபுணராகப் பணியாற்றி வரும் இவருக்கு அமெரிக்காவின் தலைசிறந்த சமையல் கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பியர்டு பவுண்டேஷன் இவரை இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுத்துள்ளது. சமையற்கலையின் ஆஸ்கர் என்று போற்றப்படும் இவ்விருதை, போட்டியிட்ட 49 பேர்களுக்கு நடுவே வென்றிருக்கிறார் விக்ரம். வாழ்த்துக்கள்.
அரவிந்த் |