கின்னஸ் படம்
கின்னஸ் சாதனைக்காக பன்னி‌ரெண்டே நாட்களில் தயாரிக்கப்பட உள்ளது ஒரு படம். தனது பல்வேறு சாதனைகளுக்காக இதுவரை 58 கின்னஸ் விருதுகளை வென்றிருக்கும் சுரேஷ் ஜோகீம் என்ற வெளிநாடுவாழ் தமிழர் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மீரா ஜாஸ்மின். இவர்களுடன் சுமன், விவேக், போஸ் வெங்கட், அலெக்ஸ் உட்படப் பலர் நடிக்கின்றனர். கேப்டன் பிரபாகரன், ராசய்யா போன்ற படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றிய வி. கிருஷ்ணமூர்த்தி இந்த கின்னஸ் சாதனைப் படத்தை இயக்க இருக்கிறார். தேவா இசையமைக்க, பாடல்களைக் கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். கதை: ஜான். வசனம்: வி.பிரபாகர். எடிட்டிங்: வி.டி. விஜயன்.

அரவிந்த்

© TamilOnline.com