தங்கர் பச்சான் ‘களவாடிய பொழுதுகள்'
உணர்ச்சிகரமான கதைகளையும், சம்பவங்களையும் இயல்பாகப் பதிய வைப்பதில் தேர்ந்த தங்கர் பச்சான் இயக்கும் புதிய படம் களவாடிய பொழுதுகள். ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்துக்குப் பிரபுதேவா கதாநாயகன். கதாநாயகி பூமிகா. இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். ‘இதுவரை நான் சொல்லாத கதை, புதிய களம். ஒவ்வொரு காதல் ஜோடியும், களவுபோன தங்கள் பொழுதுகளை நினைத்து உறங்க முடியாமல் தவிக்கப் போகிற படம் இது. மசாலா மோகத்தில் தன்னைத் தொலைத்துக் கொள்ளும் தமிழ் ரசிகர்களை நம்பி மீண்டும் களமிறங்குகிறேன்' என்கிறார் தங்கர்.

அரவிந்த்

© TamilOnline.com