1. ஷீலாவின் வயதைவிட லீலாவின் வயது தற்போது இரு மடங்கு அதிகம். 18 வருடங்களுக்கு முன்னால் லீலாவின் வயது ஷீலாவின் வயதை விட மும்மடங்கு அதிகமாக இருந்தது. லீலா, ஷீலாவின் தற்போதைய வயதுகள் என்ன?
2. ஏதேனும் ஒரு மூன்று இலக்க எண்ணை எழுதிக் கொள்ளவும். (உ-ம்: 111) தொடர்ந்து அதே எண்ணை மீண்டும் எழுதிக் கொள்ளவும் (111111) தற்போது அந்த எண்ணை 7ல் வகுக்கவும். வரும் விடையை 11ஆல் வகுக்கவும். இப்போது மீண்டும் 13ஆல் வகுக்கவும். விடை என்ன வருகிறது, எப்படி?
3. ராமு விளையாட்டாக சில சிலந்திகளையும், வண்டுகளையும் பிடித்து ஒரு பெட்டியில் அடைத்திருந்தான். அவற்றின் மொத்த எண்ணிக்கை 8; அவற்றின் கால்களின் எண்ணிக்கை 54 என்றால் சிலந்திகள் எத்தனை, வண்டுகள் எத்தனை?
4. ராஜாவிடம் 100 மீட்டர் கயிறு உள்ளது. 1 மீட்டர் கயிற்றை வெட்ட 1 நிமிடம் ஆகும் என்றால் 100 மீட்டர் கயிற்றை வெட்டி முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?
5. ஒரு சதுர வேலியை அமைக்க ஒவ்வொரு பக்கத்திற்கும் 27 தூண்கள் தேவைப்படுகின்றன என்றால் இரண்டு தொடர் சதுர வேலிகளை அமைக்க மொத்தம் எத்தனை தூண்கள் தேவைப்படும்?
அரவிந்த்
விடைகள்1.
ஷீலாவின் வயது = x
லீலாவின் வயது = 2x
18 வருடங்களுக்கு முன்னால் ஷீலாவின் வயது = x-18
18 வருடங்களுக்கு முன்னால் லீலாவின் வயது = 2x-18
18 வருடங்களுக்கு முன்னால் லீலாவின் வயது ஷீலாவின் வயதை விட மும்மடங்கு அதிகம் என்றால் =
= 3x = x
= 3(x-18) = 2x-18
= 3x-54 = 2x-18
= 3x-2x = -18+54
x = 36
ஷீலாவின் வயது = 36; லீலாவின் வயது = 2 x 36 = 72 (இரு மடங்கு)
18 வருடங்களுக்கு முன்னால் ஷீலாவின் வயது = 36-18 = 18; லீலாவின் வயது = 72-18 = 54 (மும்மடங்கு)
2.
எந்த ஒரு மூன்று இலக்க எண்ணையும் 1001 ஆல் பெருக்கினால் அதே எண் சேர்ந்த வரிசையாய் வரும். 111-ஐ 1001ஆல் பெருக்க வருவது 111111. அதே போன்று 7,11,13ன் பெருக்குத் தொகை = 7x11x13 = 1001. ஆக எந்த எண்ணால் பெருக்குகிறோமோ அதே எண்ணால் வகுப்பதால் அதே விடை வருகிறது.
3.
சிலந்திகளுக்கு எட்டுக் கால்கள்
வண்டுகளுக்கு ஆறு கால்கள்
மொத்தம் 54 கால்கள், அவற்றின் கூட்டு எண்ணிக்கை 8 என்றால் வரும் விடை - 3 சிலந்திகள் (3x8), 5 வண்டுகள் (5x6); 8 எண்ணிக்கை. கால்கள் 54
4.
99 மீட்டர் வெட்டினாலே மிகுதியான 1 மீட்டரும் வந்து விடும் என்பதால் 99 நிமிடம், அதாவது 1 மணி 39 நிமிடம், ஆகும்.
5.
ஒரு பக்கத்துக்கு 27 தூண்கள். நான்கு பக்கங்களுக்கு 27x4 = 108;
சதுரம் என்பதால் முதல் தூணே அடுத்த வரிசைக்கும் முதல் தூணாக இருக்கும் அதன் படி 108-4 = 104 தூண்கள் தேவைப்படும். இரண்டு வேலிகள் அமைக்க 2x104 = 208 தேவைப்படும். ஆனால் தொடர் சதுரம் என்பதால் 1 வரிசைத் தூண்களே இரண்டு சதுரங்களுக்கும் பொதுவாக அமையும். அதன்படி 208-26 = 182; மொத்தம் 182 தூண்கள் தேவைப்படும்.