பச்சை ஆப்பிள் தொக்கு
தேவையான பொருட்கள்
பச்சை ஆப்பிள் - 2
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
வெல்லம் - 1 சுண்டைக்காய் அளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
ஆப்பிளைக் கழுவித் தோல் சீவி கொப்பரைத் துருவியில் துருவிக் கொள்ளவும். (பொடியாகவும் நறுக்கிக் கொள்ளலாம்) வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து ஆப்பிளைப் போட்டு உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி போட்டு மூடி வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்துத் திறந்து நன்றாக மசித்துக் கிளறி பொடி வாசனை போய் சுற்றிலும் எண்ணெய்க் கொதி வரும்போது, தேவையானால் துளி வெல்லம் போட்டு, சிறிது கிளறி இறக்கி வைத்து உபயோகிக்கலாம். இது மிக மிக ருசியாக இருக்கும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com