கிரான் பெர்ரி ஊறுகாய்
தேவையான பொருட்கள்
கிரான் பெர்ரி - 1 கிண்ணம்
மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
கிரான் பெர்ரியை நன்கு அலம்பி வடிய வைத்து, வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, பெருங்காயம், தாளித்து அதில் போட்டு மஞ்சள் தூள், உப்பு போட்டு மூடி வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து எடுத்து மிளகாய்த் தூளைப் போட்டு நன்றாகக் கிளறவும். மசித்து ஒன்று சேர்ந்து வரும்போது மேலும் கொஞ்சம் எண்ணெய் விடவும். சுற்றிலும் கொதி வரும்போது இறக்கி வைக்கவும். இது தொக்கு போல மிக்க ருசியாய் இருக்கும். இதே போல் கிரான் பெர்ரியை அலம்பி உப்பு, மிளகாய்த்தூள் எல்லாம் போட்டு துண்டு ஊறுகாயாகவும் போடலாம். களாக்காய் ஊறுகாய் போல் மிக நன்றாக இருக்கும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com