சில புதியவகை இட்டலிகள் செய்யும் முறையை இங்கே பார்க்கலாம்.
பயத்தம் பருப்பு இட்டலி
தேவையான பொருட்கள்
பாசிப் பருப்பு - 1 கிண்ணம் சிவப்பு மிளகாய் - 3 (அ) 4 பச்சை மிளகாய் - 2 உப்பு - தேவைக்கேற்ப கடுகு - 1 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை
பாசிப் பருப்பை 2 அல்லது 3 மணி நேரம் ஊறவைக்கவும். இதைக் களைந்து உப்பு, மிளகாய் பெருங்காயம் சேர்த்து மைய அரைக்கவும். இதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து எடுத்து வைக்கவும். சுமார் 5 மணிநேரம் அப்படியே இருக்கட்டும். புளிப்பு கொஞ்சம் வந்திருக்கும். இந்த மாவில் இட்டலி வார்க்கவும். புளிப்புப் போதவில்லை என்றால் புளித்த தயிர் 1 கரண்டி சேர்த்துக் கொள்ளவும். இதற்குத் தேங்காய்ச் சட்னி தொட்டுக் கொள்ளலாம்.
தங்கம் ராமசாமி |