ஏப்ரல் 11, 2009, சனிக்கிழமையன்று, ஃபுட்ஹில் கல்லூரியின் ஸ்மித்விக் அரங்கில் (Foothill College, Smithwick Theater) உதவும் கரங்கள் அமைப்பின் சான்ப்ரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதி வட்டம் இந்த ஆண்டும் தன் வசந்த விழாவான கலாட்டா-2009 என்னும் நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இதில் திரட்டப்படும் நிதி, உதவும் கரங்களின் சமூகநலப் பணிகளுக்கு அளிக்கப்படும்.
இதில் முதன்முறையாக நடைபெற இருக்கும் ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சியில், விரிகுடாப் பகுதியின் கணவன் மனைவிகள் ஒருவர் மற்றவரை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்று காணப் போட்டியிடுவார்கள். இது மிகச் சுவாரசியமாக இருக்கும்.
மற்றொரு கலக்கல் நிகழ்ச்சி: LoL Sabha! தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் வாய் விட்டுச் சிரித்தால் கவலைகள் சற்றேனும் மனம் விட்டுப் போகலாம் அல்லவா!
கலாட்டா-2009 பல வள்ளல்களின் நன்கொடையால் சாத்தியமாகிறது. வள்ளல்நிலையில் நன்கொடை வழங்குவதின் பலன்கள், வழங்கும் முறை ஆகியவற்றைப் பற்றி மேலும் அறிய உதவும்கரங்கள் விரிகுடாப் பகுதி இயக்கத்தினரை அணுகுங்கள்.
உதவும் கரங்கள் தொண்டர்களையும் வரவேற்கிறது. கலாட்டா-2009 போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தொடர்பு கொள்ள:
இணையதளங்கள்: www.udavumkarangal-sfba.org , www.galaata.org
- கதிரவன் எழில்மன்னன் |