USA தமிழ்ப் பள்ளி இரண்டாவது ஆண்டுவிழா
மே 2, 2009 அன்று மதியம் 12:30 மணிக்கு ‘தமிழ் ஸ்கூல்ஸ் USA' தனது இரண்டாவது ஆண்டு விழாவை டிரிஸ்கோல் கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் (555 Lombard Road, Addison, Illinois 60101) நடத்த இருக்கிறது. இதற்கு இந்நாள், முன்னாள் மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் நண்பர்கள் வருகை தரலாம்.

பள்ளியின் மாணவர்களும் ஆசிரியர்களும் மட்டுமே இவ்விழாவில் நிகழ்ச்சிகளை வழங்கலாம். ஆனால், மாணவர்களின் பெற்றோர்களில் நிகழ்ச்சித் தயாரிப்பில் மாணவர்களுக்கு உதவலாம். பாடல், கதை சொல்லல், வாசித்தல், நடனம், சிறு நாடகம் (தமிழ்ப் பாடநூல்களில் உள்ள கதைகளைப் பயன்படுத்தலாம்) ஆகிய நிகழ்ச்சிகளை வழங்கலாம். ஆனால் எல்லா நிகழ்ச்சிகளும் தமிழிலேயே இருத்தல் அவசியம்.



© TamilOnline.com