பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பு நிகழ்ச்சிகள்
14 ஏப்ரல் 2009 அன்று உதயமாக இருக்கும் விரோதி தமிழ்ப் புத்தாண்டை பாரதி தமிழ்ச் சங்கம் ஏப்ரல் 25ம் தேதி அன்று சன்னிவேல் இந்துக் கோவில் அரங்கில் மாலை 3 மணி முதல் 8 மணி வரை வரவேற்றுக் கொண்டாடவிருக்கிறது. இதில் சிறுவர்களும் பெரியவர்களும் கலந்து கொள்ளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், சிறப்புச் சொற்பொழிவுகள், சிறு நாடகம், நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சி ஆகியவை இடம்பெற உள்ளன.

கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறவும், மேலதிக விபரங்களுக்கும் கீழ்க்கண்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்பு கொள்ளவும். அனுமதி இலவசம்.

இணைய தளம்: www.batamilsangam.org
மின்னஞ்சல்: bharatitamilsangam@yahoo.com
தொலைபேசி:
சுந்தர்: 408.390.5257
ஹரி: 510.383.6146
அருண்: 408.807.8981

- திருமலை ராஜன்

© TamilOnline.com