ஏப்ரல் 11, 2009 மாலை 4:30 மணிக்குத் தர்குட் மார்ஷல் நடுநிலைப் பள்ளி அரங்கத்தில் (9700 Avenue of Nations, San Diego CA 92131) சான்டியேகோ தமிழ்ச் சங்கம் ‘காதல்! காதல்!! காதல்!!!’ என்ற நகைச்சுவை நாடகம் ஒன்றை வழங்குகிறது. ‘மூன்று என்பது முக்கோணம், ஆறு என்பது கும்பல்’ என்ற விவரணையுடன் வரும் இந்த நாடகத்தில் சுரேஷ், சந்தியா இடையிலான காதலுக்கு இரண்டு வில்லன்கள் - இருவரின் தகப்பன்மார்கள் என்ற பிரச்சனையோடு தொடங்குகிறது. போதாக்குறைக்கு நாவிதர் பாண்டி வேறு இந்தச் சிக்கலில் நுழைகிறார். கோலிவுட் நடிகர்களான பிரசாத் விமலாவின் காதல் கதையில் இவர்களும் போய் விழுவது கதையை இடியாப்பச் சிக்கலாக்குகிறது. யாரை யார் மணந்து கொள்கிறார்கள் என்று அறிய ஏப்ரல் 11 வரை காத்திருக்க வேண்டியதுதான். விவரங்களுக்கும், நுழைவுச் சீட்டு வாங்கவும்: sdts.org
|