விஜித் அறுமுகமாகும் ராகவன்
அகினா புரொடக்‌ஷன் பட நிறுவனம் சார்பில் செல்வராஜ் தயாரிக்கும் புதிய படம் ராகவன். செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பரந்தாமன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். இசை, கங்கை அமரன். 'ஆளவந்தான்' கமலுக்குப் பிறகு கதாநாயகனின் அரைநிர்வாணக் காட்சி இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறதாம். படத்தில் விஜித்துக்கு ஜோடி நடிகை ராதிகா மல்ஹோத்ரா.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com