கணிதப் புதிர்கள்
1. 15, 34, 54, 75... வரிசையில் அடுத்து வருவது என்ன, ஏன்?

2. ராமு 100 டாலர் செலவழித்து மொத்தம் 100 பொருட்களை வாங்கினான். ஒரு சட்டையின் விலை $10. ஒரு பனியனின் விலை $5. ஒரு கர்ச்சீப்பின் விலை $0.50 என்றால் அவன் ஒவ்வொன்றிலும் எத்தனை வாங்கியிருப்பான்?

3. A, B, C என்ற மூன்று நபர்களின் வயதின் பெருக்குத் தொகை 36. அவர்களில் Cயின் வயது ஆறு வருடம் கழித்து 12 ஆகிறது என்றால் அவர்கள் ஒவ்வொருவரின் வயது என்ன?

4. ஒரு பெட்டியில் 10 ரொட்டிகள் இருந்தன. அவற்றை ஆண்களுக்குத் தலா 2 வீதமும், பெண்களுக்குத் தலா 1/2 வீதமும், மீதமுள்ள குழந்தைகளுக்கு தலா 1/4 பங்கு வீதமும் பிரித்துக் கொண்டனர். ரொட்டியின் எண்ணிக்கையும் அவர்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்தது என்றால் ஆண், பெண், குழந்தைகள் எத்தனை பேர் அதனைப் பகிர்ந்து கொண்டனர்?

5. ஒரு தோப்பில் ஒவ்வொரு பத்து தென்னை மரங்களுக்கும் நான்கு மா மரங்களை நட்டுள்ளனர். மாமரங்களின் எண்ணிக்கையை விட தென்னை மரங்களின் எண்ணிக்கை 36 அதிகமாக உள்ளது என்றால் அந்தத் தோப்பில் இருந்த மாமரங்கள் எத்தனை, தென்னை மரங்கள் எத்தனை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com