ஏப்ரல் 2009: குறுக்கெழுத்துப் புதிர்
சென்றமாத முன்னுரையில் Such a tyre would be flat indeed (8) என்ற ஆங்கிலப் புதிர்க் குறிப்பை (இ.எக்ஸ்பிரஸ்) வெளியிட்டிருந்தேன். அதில் சிறிய ஏமாற்றுவேலை flat indeed என்பதை flat in deed என்று பிரித்துப் படிக்க வேண்டும். flat என்ற சொல்லை உள்ளே தள்ள deflated என்ற சொல் கிடைக்கிறது. புதிராளி காரில் செல்லும்போது இவ்வாறு தவித்தபோது மனங்கலங்காமல் காற்றில்லாத போது தூற்றிக் கொண்டுவிட்டார்.

குறுக்காக:
3. வறண்டு பூச்சியில்லை நிலவுண்டு நினைவில்லை (3)
5. குற்றவாளிகள் போகும் வழியா, போகுமிடமா? (5)
6. விளக்கிலிருக்கும் உண்மையை மாற்றிச் சொல் (2)
7. தோட்டவேலை செய் அல்லது குலை (3)
8. அண்டவெளியில் இருண்ட குழி எதையும் வெளியேவிடாது (5)
11. காலில்லா அடியாரை உருண்டு அணைத்த உடல் கதைத்தல் (5)
12. விலங்கை வீழ்த்திய மாயோன் ஆவலுடன் சென்ற வெளிநாட்டு மாநிலம் (3)
14. ஒரு நட்சத்திர ராசியாக இரு ஆசீர்வாதம் (2)
16. லலித கனகாங்கி காதலியைப் பிரிந்ததால் பேதலித்துத் தெளிவையிழந்தன (5)
17. நீரோடுமிடத்தில் இருக்கும் நிலை தடுமாறுதல் (3)

நெடுக்காக:
1. சத்திரத்தில் தடைப்படும் குடைப் பயணம் (2, 4)
2. ஆற்றுக்கு அந்தப் பக்கம் பளிச்சென்று தெரியும் பொய் வண்ணம் (3)
3. திரிகூடராசப்பர் கண்டுகளித்த இயற்கையெழில் (5)
4. திருப்பதியந்தாதி நினைவு நாள் (2)
9. பாரதத்தின் பெரிய குடும்பத்தில் மூத்தவன் (6)
10. முட்டுக்கட்டை சென்றவழி கல் (5)
13. உயர்ந்து செல், அடிப்பதற்குத் தயாராகவா? (3)
15. கொஞ்சமாக விரசங்கொண்ட இலக்கியம் படைப்பவன் (2)

நீங்கள் புதிர் மன்னரா?

குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. 15க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

vanchinathan@gmail.com

மார்ச் 2009 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்

© TamilOnline.com