மிச்சிகன் தமிழ்ச்சங்கம்: திருக்குறள் மற்றும் பேச்சுப் போட்டிகள்
மார்ச் 28, 2009 அன்று மிச்சிகன் தமிழ்ச்சங்கம் திருக்குறள் மற்றும் பேச்சுப் போட்டிகளை மாலை 2.00 மணிக்கு வில்லியம் எம். காஸ்டிக் ஆக்டிவிட்டீஸ் சென்டரில் (28600 லெவன் மைல் ரோடு, ஃபர்மிங்க்டன் ஹில்ஸ், MI 48336; (248) 473-1800) ஏற்பாடு செய்திருக்கிறது. அனுமதி இலவசம். இரண்டாம் சுற்றுப் போட்டிகள் 4 மணிக்குத் தொடங்கும்.

திருக்குறள் ஒப்புவித்தல்/ வார்த்தை விளையாட்டு/ சொல்வதை எழுதுதல்/ பேச்சுப்போட்டி ஆகியவற்றில் 1 முதல் 13 மேற்பட்ட சிறார்கள் வரை பல வயதுசார் குழுக்களாகப் போட்டியில் பங்கு பெறலாம். நிகழ்ச்சியின் இறுதியில் பரிசு பெற்றோர் விவரம் அறிவிக்கப்படும்.

பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் மார்ச் 15, ஞாயிறுக்குள் கீழ்க்கண்ட சங்க உறுப்பினர்களிடம் பதிவு செய்து கொள்ளலாம்.

பிச்சையா பாலசுப்ரமணியன் 248.797.8212 (mtspitchiah@gmail.com)
ராதா அக்கோர் - 248.743.0607 (radha.mts2009@gmail.com)



© TamilOnline.com