'அசல்' அஜீத்
அஜீத் - சரண் இருவரும் இணைந்து அளித்த 'காதல் மன்னன்', 'அமர்க்களம்', 'அட்டகாசம்' மூன்றுமே வெற்றிப் படங்கள். இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்தக் கூட்டணி இணைகிறது. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பாக அஜீத் நடிக்கும் புதிய படத்தை சரண் இயக்குகிறார். படத்திற்கு ‘அசல்' என்று பெயர் சூட்டியுள்ளனர். ஷமீரா ரெட்டி கதாநாயகி. "இதுவரை அஜீத்துடன் இணைந்து நான் கொடுத்த படங்களிலிருந்து, புதுமையான திரைக்கதை அம்சத்துடன் இது ரொம்பவே மாறுபட்ட படமாக இருக்கும்" என்கிறார் சரண். படத்தில் வித்தியாசமான தோற்றத்தில், பெரிய மீசையுடன் நடிக்க இருக்கிறார் அஜீத்.

அரவிந்த்

© TamilOnline.com