மார்ச் 2009: குறுக்கெழுத்துப் புதிர்
உழைப்பும், பலனும்

ஆங்கிலப் புதிர்களைத் தீர்க்கும் முயற்சியில் முக்கால்வாசி தாண்டுவதில்லை. அபூர்வமாக முடித்தாலும் நினைவில் நிற்பது மிகவும் கஷ்டம் கொடுத்த குறிப்புகள் என்பதில்லை. சில சமயம் எளிதாக இருந்தாலும் அவை மனதில் பதிந்து விடுகின்றன. அப்படிப்பட்ட ஒன்று சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வந்தது, முயன்று பாருங்கள்: Such a tyre would be flat indeed! (8) கஷ்டம் கொடுத்தது, அல்லது அதை உருவாக்கப் புதிராளர் அதிகம் பாடுபட்டது இதையெல்லாம் தாண்டி சில சமயம் எளிமையானவையே மனதில் நிற்கின்றன. அமெரிக்காவில் மக்டோனால்டு நிறுவனம் அதிகம் பர்கர் போன்ற உணவுக்குப் பெயர் போனதென்றாலும், அதிக லாபம் ஈட்டுவது அவர்கள் விற்கும் பெப்சி அல்லது கோககோலாவிலோதான் என்று படித்தேன். ஏன் இப்படி என்பதே புதிர்தான்.

குறுக்காக:
5. பணமுடையவரிடம் பண நெருக்கடி (2)
6. பற்றாக்குறை உணவு இடப்படும் பொருள் பட்ட கஷ்டம் (6)
7. மகேந்திர வர்மரின் குலப் புலம்பல் லவகுசரிடம் காணலாம் (4)
8. பண்பட்ட நேர்மை உதயகால வானத்தின் தோற்றம் (3)
9. குடைந்து எதிர் சென்ற பாராட்டுப் பட்டம் (3)
11. வலி ஒலி கேட்கும் பொறி ஒத்துக்கொள்ளாது (3)
13. கம்மலில் இருக்கும் நில அளவுக்குச் செல்வம் முற்பட்டது (4)
16. பலனை அனுபவித்த அஞ்சிய தேனடை சற்றே கிள்ளப்பட்டு உட்கொள்ளப்படும் (6)
17. அறுபடை வீடு ஒன்று குறைந்தது, குறை (2)

நெடுக்காக:
1. பக்தி மரியாதையுடன் கொடுத்தாலும் சாப்பிடப்படாத உணவு (4)
2. போட்ட பணமா? வருவது பாதியானாலும் ஆரம்பத்தில் இருக்கும் (5)
3. முக்கண்ணநார் (3)
4. பாதிப் பால் சுமந்த பாத்திரம் பித்தன் மாலையில் காணலாம் (4)
10. சட்டத்தில் சொன்னது துன்பத்திலுழல்பவர் தலையில் எழுதியது என்று புலம்புவர் (5)
12. சித்தர்கள் பொய்யென்று கூறியதில் ஸ்வரம்போடும் செயல் (4)
14. நீண்டதூரம் சுமந்து வந்த சாந்தி இடை இரும்பைக் கவரும் (4)
15. பொருள்கள் விற்கப்படுமிடம் சிகரத்தின் உச்சியால் முடிவு (3)

நீங்கள் புதிர் மன்னரா?

குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை மார்ச் 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. மார்ச் 15-க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

vanchinathan@gmail.com

பிப்ரவரி 2009 புதிர் அரசிகள், மன்னர்கள்

© TamilOnline.com