வாசகர் கைவண்ணம்: சுரைக்காய் கோஃப்தா
தேவையான பொருட்கள்
சுரைக்காய் - 500 கிராம்
கடலை மாவு - 250 கிராம்
தயிர் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்த்தூள் - 1/2 மேசைக்கரண்டி
கரம் மசாலா - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
கிரேவிக்குத் தேவையான பொருட்கள் (தேவைக்கேற்ப பயன்படுத்தவும்)
தக்காளி
வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி
பாலேடு அல்லது க்ரீம்
உப்பு
சீரகம்
மஞ்சள்பொடி

செய்முறை
சுரைக்காயைத் தோல் சீவிச் சிறிய துண்டங்களாகப் போட்டு, நன்றாக வேக வைக்கவும். பின் தண்ணீரை வடித்து கடலைமாவைப் பச்சை வாசனை போகும்வரை வறுக்கவும். வேகவைத்த காய்கறிகளுடன் உப்பு, மஞ்சள் தூள், பாலேடு (அ) க்ரீம், கரம் மசாலாத்தூள், தயிர் எல்லாவாற்றையும் சேர்த்துக் கலந்து சற்றுத் தளரப் பிசையவும். (பக்கோடா பதத்திற்குப் பிசைந்தால் சரிவராது). தளர இருந்தால் கோப்தா மிருதுவாக இருக்கும். கரகரப்பு ஆவதற்கு முன்பாகவே எடுக்கவும்.

வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை தக்காளியுடன் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, சீரகம் போட்டு, அரைத்தவற்றைப் போட்டு, உப்பு, கரம் மசாலாத் தூள், சுரைக்காய் வெந்த தண்ணீர் மற்றும் கோஃப்தாக்களைப் போட்டுக் கொதிக்க விடவும். நன்கு கிளறவும். க்ரேவி வற்றாமல் இருக்கும் போதே கொத்தமல்லித் தழையைப் போட்டு க்ரீம் (அ) பாலேடு கலந்து பரிமாறவும்.

லலிதா பாஸ்கரன்,
வெஸ்த் வெர்ஜீனியா

© TamilOnline.com