மிச்சிகன் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
ஜனவரி 18, 2009 அன்று கிளாசன் உயர்நிலைப் பள்ளியில் மிச்சிகன் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா கொண்டாடியது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. பானை, மாடு, குத்துவிளக்குடன் பொங்கல் அலங்காரம் மிகச் சிறப்பாக இருந்தது. டெட்ராய்ட் பகுதி நாட்டிய ஆசிரியர்கள் தொகுத்து வழங்கிய பரதநாட்டியம் (புஷ்பாஞ்சலி - ராதிகா கணேசன், சூரிய நமஸ்காரம் - சுதா சந்திரசேகர்), விசேட அமைப்புகளுடன் கூடிய (பஞ்சபூதம் - ராதிகா ஆசார்யா) புலியாட்டம், ஒயிலாட்டம், கும்மி, நாட்டுப்புறக் கலைகள் (லலிதா ரவி) என்று அனைத்தும் சிறப்பாக இருந்தன.

அத்துடன் குழந்தைகள், பெரியோரின் ஆடல், பாடல் என்று நிகழ்ச்சி விருந்தாக அமைந்திருந்தது. குழந்தைகளே எழுதி, நடித்து, வாசித்த நகைச்சுவை நாடகம் அருமை. பேசும் படம் போல், வசனம் ஏதும் இல்லாமல் பெரியோர்கள் நடத்திய 'car skit', அனைவரையும் சைகைகளால் சிரிக்க வைத்ததுடன், சிந்திக்கவும் வைத்தது. கடும் குளிருக்கும், பனிக்கும் இடையில் இந்தத் தைத் திருவிழா, மனதுக்குப் புத்துணர்ச்சியைத் தருவதாக அமைந்திருந்தது.

ராதா, டிராய், மிச்சிகன்

© TamilOnline.com