ஒவ்வோர் ஆண்டும் ஜூலைத் திங்கள் முதல் வாரத்தில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை (FeTNA) தனது ஆண்டு விழாவைத் தமிழ்விழாவாகக் கொண்டாடுவது வழக்கம். இருபத்திரண்டாம் ஆண்டு விழா, இவ்வாண்டு அட்லாண்டாவில் (ஜார்ஜியா) நிகழ உள்ளது. இம் மாபெரும் விழாவுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. 2009 ஜூலை 3, 4, 5 தேதிகளில் நடக்க இருக்கும் இவ்விழாவின் ஒருங்கிணைப்புப் பணிகளை அட்லாண்டா தமிழ் விழா ஒருங்கிணைப்புக் குழுவிடம் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை அளித்துள்ளது. விழாக் குழுவினர் அனைவரையும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கின்றனர்.
மேலதிக விவரங்களுக்கு: www.tamilvizha.com
|