பிப்ரவரி 14, 2009 அன்று சான்டியேகோ இந்திய அமெரிக்கச் சங்கம், தனது வெள்ளி விழாவோடு, காந்தி நினைவுச் சொற்பொழிவின் வெள்ளி விழாவையும் சேர்த்துக் கொண்டாடுகிறது. சான்டியேகோவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆட்கின்ஸன் அரங்கத்தில் இது நடைபெறும்.
மஹாத்மா காந்தியின் இரண்டு பேரர்கள் இதில் பங்கேற்பர். பேரா. ராஜ்மோஹன் காந்தி. இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் (அர்பானா-ஷாம்பேன்) வருகைப் பேராசிரியர். இவர் நினைவுச் சொற்பொழிவை ஆற்றுவார். புதுதில்லியிலுள்ள கொள்கை ஆய்வு மையத்தில் இவர் பேராசிரியராக உள்ளார். தனது தாத்தாவின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதியுள்ளதோடு, இந்தியாவின் மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளர். ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மக்களுரிமைக் கமிஷனுக்கு ஒரு பிரதிநிதிக் குழுவை நடத்திச் சென்றுள்ளார்.
மற்றொரு பெயரரான அருண் காந்தி கூட்டத் தலைமை தாங்குவார். உலகளாவிய காந்திக் கல்விக் கழகத்தின் நிறுவனர், இயக்குனரான இவர், அமுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக உலகெங்கும் குரலெழுப்பி வருகிறார். அஹிம்ஸை குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார். ஜாதிப் பாகுபாடு, வறுமை நீக்கம் ஆகியவற்றுக்காகப் பாடுபட்டு வருகிறார். 1991ல் தன் மனைவி சுனந்தா அவர்களுடன் சேர்ந்து மோ.க. காந்தி அஹிம்சைக் கழகத்தை இவர் நிறுவினார்.
சான்டியேகோ இந்திய அமெரிக்கச் சங்கத்தை 1984ல் பேரா எம்.சி. மாதவன் அவர்களால், நண்பர்கள் துணையோடு தொடங்கினார். உலகுக்கு மஹாத்மாவின் கொடையை நினைவுறுத்தும் வண்ணம் காந்தி நினைவு உதவித்தொகை, சொற்பொழிவு மூலமும் பிற சேவைகள் மூலமும் இச்சங்கம் பணியாற்றி வருகிறது. இந்தச் சங்கத்துக்குத் தரப்படும் நன்கொடைகள் அமெரிக்காவில் 501(c)(3)ன் கீழ் வரி விலக்குப் பெற்றவை.
மேலதிக விவரங்களுக்குப் பார்க்க: www.sdias.org
மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள: madhavan@mail.sdsu.edu
மது மாதவன், சான்டியேகோ |