ப்ரியா வர்மாவுக்கு டயானா விருது
சண்டிகாரைச் சேர்ந்தவர் சிறுமி ப்ரியா வர்மா (16). இவருக்கு இங்கிலாந்தின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றான டயானா விருது வழங்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்ட அளவை உயர்த்துவது தொடர்பான அவரது ஆராய்ச்சிக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. டயானா விருது இங்கிலாந்து அல்லாத வேறொரு நாட்டவருக்கு வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். லண்டனில் நடைபெற்ற இவ்விருது நிகழ்ச்சிக்கு, தேர்வு சமயமாக இருந்ததால் ப்ரியாவால் செல்ல இயலவில்லை. அதனால் விருது இவருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ப்ரியா வர்மா, ஐஏஸ் முடித்து நாட்டுக்குச் சேவை செய்ய விரும்புகிறார். நிறைவேற வாழ்த்துவோம்.

அரவிந்த்

© TamilOnline.com