மீண்டும் எம்.எஸ்.வி., டி.எம்.எஸ்., பி.சுசிலா
அந்தக் காலத்தில் மட்டுமல்லாமல் இந்தக்காலத்திலும் இவர்களுக்கு நிகர் யாரும் இல்லை என்று கூறும் தகுதி படைத்தவர்கள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், வெண்கலக் குரலோன் டி.எம்.செளந்தரராஜன், இசைக் குயில் பி.சுசீலா ஆகியோர். இவர்கள் ‘வாலிபன் சுற்றும் உலகம்' என்ற படத்திற்காக மீண்டும் இணைகின்றனர். ஸ்ரீ ஜெய் சக்தி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் எம்.ஜி.ஆர். போலவே காட்சி அளிக்கும் எம்.ஜி.ஆர். சிவா நாயகனாக நடிக்கிறார். மீனாட்சி கதாநாயகியாக நடிக்கிறார். பாடல்களை வாலியும், காமகோடியனும் எழுத, லலிதசாமி படத்தை இயக்குகின்றார்.

அரவிந்த்

© TamilOnline.com