சன் பிக்சர்ஸின் 'தீ'
காதலில் விழுந்தேன், தெனாவெட்டு, திண்டுக்கல் சாரதி, படிக்காதவன் பட வெற்றியைத் தொடர்ந்து சன்பிக்சர்ஸின் அடுத்த படைப்பாக வெளிவர இருப்பது 'தீ'. ஸ்ரீமூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் நாயகன் சுந்தர் சி. கதாநாயகிகளாக நமீதா, ராகினி ஆகியோர் நடிக்கின்றனர். சாரதி என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சுந்தர் சி., அரசியல்வாதியாகவும் சில காட்சிகளில் நடிக்கிறார். கண்களில் தீப்பொறி பறக்க, அரை நிர்வாணக் கோலத்தில் சுந்தர் சி. நடந்து வரும் காட்சி அண்ணாசாலை, சென்ட்ரல் ஸ்டேஷன், மெரீனா பீச் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. சுந்தர் சி.க்கு இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர்.

அரவிந்த்

© TamilOnline.com