ஷாம் நடிக்கும் அந்தோணி-யார்?
அன்னம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக சி. விஜயகுமார் தயாரித்திருக்கும் படம் 'அந்தோணி-யார்?'. ஷாம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மல்லிகா கபூர் நடித்திருக்கிறார். இவர்களுடன் விவேக், வெண்ணிற ஆடை' மூர்த்தி, ராஜேஷ், பிரேம் சங்கர், பிரகதி ஆகியோர் நடித்திருக்கின்றனர். வில்லனாக லால் நடித்திருக்கிறார். தினா இசையமைக்க, பாடல்களை யுகபாரதி, பழனி பாரதி, சினேகன், கிருதியா ஆகியோர் எழுதியுள்ளனர். படத்தின் கதை எழுதி இயக்கியிருப்பவர் சி.டி.பாண்டி. மீனவ கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாம் இது.

அரவிந்த்

© TamilOnline.com