கணிதப் புதிர்கள்
1. அது ஒரு மூன்று இலக்க எண். முதல் இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 15. இரண்டாம், மூன்றாம் எண்களின் கூட்டுத்தொகை 14. முதலாம் மற்றும் மூன்றாம் எண்களின் கூட்டுத்தொகை 13 என்றால் அந்த எண் எது?

2. ராமு, சோமுவை விட 2 வயது பெரியவன். ராமு வயதின் வர்க்கத் தொகையிலிருந்து சோமு வயதின் வர்க்கத் தொகையைக் கழித்தால் மீதி 100 வரும் என்றால், ராமுவின் வயது என்ன, சோமுவின் வயது என்ன?

3. கீதாவின் எடையை விட ராதாவின் எடை 5 கிலோ குறைவு. ராதாவின் எடையையும், கீதாவின் எடையையும் பெருக்கினால் வரும் தொகை 1800 என்றால் கீதா, ராதாவின் எடை எவ்வளவு?

4. அது ஒரு மூன்று இலக்க எண். அதை ஒன்றுடன் ஒன்று கூட்டி வரும் விடையும், ஒன்றுடன் ஒன்று பெருக்கி வரும் விடையும் சமமாக உள்ளது. அத்துடன் அந்த எண்ணின் தலைகீழ் எண்ணைக் கூட்டினால் வரும் விடையும் சம எண்ணாக உள்ளது என்றால் அந்த எண் எது?

5. ராஜாவின் வயதை விட அவன் அம்மாவின் வயது ஐந்து மடங்கு அதிகம். அவன் அப்பாவின் வயது ஆறு மடங்கு அதிகம். அவன் அம்மாவின் வயதையும், அப்பாவின் வயதையும் பெருக்கினால் 1080 வரும் என்றால் ராஜாவின் வயது மற்றும் அவன் அம்மா, அப்பாவின் வயது என்ன?

விடைகள்

அரவிந்த்

© TamilOnline.com