பிப்ரவரி 3, 2007 அன்று செல்வி லாவண்யா தவக்குமாரின் நடன அரங்கேற்றம் வான்கூவரில் (பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா) உள்ள Michael J. Fox அரங்கத்தில் நடைபெற்றது. குரு வாணி தில்லைநாதன் அவர்களிடம் 9 ஆண்டுகளாக லாவண்யா நடனம் பயின்றுள்ளார்.
புஷ்பாஞ்சலி, கணேசாஞ்சலி, அலாரிப்புடன் தொடங்கிய நடன நிகழ்ச்சி, ஜதிஸ்வரம், சப்தம், வர்ணம், பதம், தில்லானா ஆகியவற்றுடன் தொடர்ந்து குறத்தி நடனத்துடன் முடிவடைந்தது. பதம் ஆடுவதற்குத் தேர்ந்து எடுக்கப்பட்டிருந்த 'கள்ளப் பார்வை ஒன்றே போதுமே' என்ற பாடல் மிக வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருந்தது.
'இசை கலாவித்தகர்' மோகன் திருச்செல்வம் (குரலிசை), அளவையூர் இசைஞான பூபதி ஆர்.எஸ். கேசவமூர்த்தி (வயலின்), ரதி ரூபன், பரம்சோதி (மிருதங்கம்) ஆகியோர் இதற்கென்றே டொரண்டோ நகரிலிருந்து வந்து, சிறப்பாகப் பின்னணி இசைத்தனர்.
லாவண்யாவின் கடின உழைப்பும் அவரது குரு அளித்திருந்த சிறப்பான பயிற்சியும் அரங்கேற்றத்துக்கு மெருகூட்டியது என்றால் மிகையல்ல. |